பா.ஜ.கவின் முக்கியம் இதுதான்... பொய்யை பரப்பும் எதிர்க்கட்சிகள்: அமித் ஷா பரபரப்பு குற்றசாட்டு.!
BJP important thing Amit Shah accusation
உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களின் மனங்களை வெல்வது முக்கியம் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருப்பது தேர்தலில் வெற்றியை தருகிறது என தெரிவித்துள்ளார்.
ஜம்மு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து அமித்ஷா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசினார். அப்போது அவர்,
பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது என எதிர்கட்சிகள் பிரசாரம் செய்கின்றனர். முக்கியமாக ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களின் நலனில் பா.ஜ.க அக்கறை செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பா.ஜ.க குறித்து பொய்யான பிரசாரங்களை எதிர்கட்சிகள் பரவி வருகிறது. ஆனால் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க செயல்படுகிறது.
காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியாகியவை இது நாள் வரை காஷ்மீர் மக்களை ஏமாற்றி தான் வந்துள்ளது. தங்களது அரசியல் லாபத்துக்காக காஷ்மீர் மக்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துகின்றனர்.
பயங்கரவாதம், வன்முறை, கல்வி, பிரிவினைவாதம் போன்றவற்றால் காஷ்மீர் பின்தங்கி விட்டது என தெரிவித்துள்ளார்.
English Summary
BJP important thing Amit Shah accusation