தேர்தலுக்கு தயாரான பாஜக.!! 4 மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள்.!! பரபரக்கும் டெல்லி.!! - Seithipunal
Seithipunal


வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எந்த வகையிலும் எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. கட்சி ரீதியாகவும், அரசு ரீதியாகவும் தங்களது அதிரடி பணிகளை மத்திய பாஜக அரசு தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தற்பொழுது கட்சி அமைப்பில் பல மாற்றங்களை பாஜக கொண்டு வந்துள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவராக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் மாநில தலைவராக நியமிப்பதன் மூலம் பாஜக தெலுங்கானாவில் வலுவாக காலுன்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஒருவர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மத்திய பாஜக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநில பாஜக தலைவராக முன்னாள் கல்வித் துறை அமைச்சரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி ராமராவின் மகளுமான புரந்தேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு உடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்ட உள்ள நிலையில் புரந்தேஸ்வரி நியமனம் செய்யப்பட்டு இருப்பது கூட்டணியில் இணக்கமான சூழல் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பாபுலால் மாரன்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜார்க்கண்ட் மாநில அரசின் எதிர்க்கட்சித் தலைவராக தற்பொழுது இருந்து வருகிறார். பாஜக ஜார்கண்ட் மாநிலத்தில் வேரூன்ற மிக முக்கியமான காரணமாக இருந்தவர் பாபுலால் மரான்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பாஜக தலைவராக சுனில் ஜாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாநிலங்களின் பாஜக தலைவர்களை பாஜக தலைமை மாற்றியுள்ளது. இதன் மூலம் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலோடு நாடாளுமன்ற பொது தேர்தலுக்கும் பாஜக தற்பொழுதே தயாராகிவிட்டது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP has appointed new presidents four state


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->