அமைச்சர் சரத்குமாரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்... பாஜக போர்க்கொடி!
bjp condemn to tvk minister sarathkumar
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "போதைப்பொருளோடு தமிழக அமைச்சர் சரத்குமார் இருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட காட்சி என்று சொன்னாலும், அந்த காட்சியை தன் சமூக வலைத்தளத்திலேயே சரத்குமார் அவர்கள் பதிவிட்டிருந்தாலும் பெரும் சந்தேகத்தை இந்த வீடியோ எழுப்பியுள்ளது என்பது உண்மையே.
தன் குழந்தைக்கு மாத்திரையை உடைத்து பவுடர் செய்து கொடுத்தேன் என்று அமைச்சர் சொல்கிற அதே நேரத்தில் அந்த வீடியோ வுக்கு தலைப்பாக 'Thug Life' என்று அப்போது குறிப்பிட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
பல்வேறு விளக்கங்களை இப்போது அமைச்சர் கூறினாலும், இது குறித்து தீவிர விசாரணைக்கு அமைச்சரை உட்படுத்த வேண்டும். அவர் பயன்படுத்தியது போதைப் பொருளா இல்லையா என்பதை கண்டுபிடிக்க வேண்டியது தமிழக காவல்துறையின் கடமை. தவறிருப்பின் அமைச்சரவையிலிருந்து உறுதியாக நீக்கப்பட வேண்டும்.
தமிழகத்தின் அமைச்சராக தான் ஒருநாள் இருக்க நேரிடும் என்று கனவிலும் அப்போது நினைத்திருக்க மாட்டார் சரத்குமார் அவர்கள் எனும் நிலையில், பொது வெளியில் எப்படி நடந்து கொள்வது என்கிற பொறுப்பை அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் உணரவேண்டும்.
முதலமைச்சர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் இப்போதாவது விழித்துக் கொள்வாரா? என்று கேவி எழுப்பியுள்ளார்.
English Summary
bjp condemn to tvk minister sarathkumar