பஞ்சாபி மாநில அரசியலில் திடீர் திருப்பம்.! பாஜகவுடன் கைகோர்த்த அமரீந்தர் சிங்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்க்கும், காங்கிரஸ் கமிட்டி சித்துவுக்கும் இடையே கடந்த சில வருடமாக கருத்து மோதல் போக்கு இருந்து வந்தது. இவர்களின் பிரச்சனையை அக்கட்சி தலைமை பேசி சரி செய்ய முயற்சித்தும் பலனில்லை. 

பல்வேறு எம்.எல்.ஏக்கள் சித்துவுக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கிய நிலையில், அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

நாட்டுக்கு எதிராக கருத்து கூறிய சித்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியும், நாட்டுக்கு எதிராக கருத்து கூறியவரை கண்டித்த முதல்வரை பதவியில் இருந்து காங்கிரஸ் நீக்கி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனை தொடர்ந்து அமரீந்தர் சிங் 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற கட்சியை தொடங்கினார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும், பஞ்சாப் லோக் காங்கிரஸும் இணைந்து போட்டியிடும் என்று, அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். 

வரும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் கூட்டணி 101 சதவிகிதம் வெற்றிபெறும் என்றும் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Alliance Amrinder Singh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->