எக்ஸிட் போல்ஸ் ரிசல்ட்.. மீண்டும் மெஜாரிட்டி ஆட்சி.. முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 224 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் அரிசி பெரும்பான்மை பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். காங்கிரஸ், பாஜக, மஜத இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இன்று மாலை ஐந்து மணி நிலவரப்படி 65 69% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் 6 மணி அளவில் 70% வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பதிவாகும் வாக்குகள் வரும் மே 13ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. 

இதன் காரணமாக கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து பேசியுள்ள தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை "கருத்துக் கணிப்புகள் 100% சரியாக இருக்க முடியாது. நாங்கள் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளோம். மே 13 வரை காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என  செய்தியாளர்கள் சந்திப்பில் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Basavaraj Bommai hopes to form govt with majority again


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->