போடாத சாலைக்கு 3 கோடி ஆட்டையை போட்டவர்கள் மீது FIR பதியப்படுமா? - அறப்போர் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போடாத சாலைக்கு 3 கோடி ஆட்டையை போட்டவர்கள் மீது FIR பதியப்படுமா?

சாலையே போடாமல் 3 கோடி ரூபாய் பணத்தை ஒப்பந்ததாரருக்கு கொடுப்பது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கீழ்மட்ட அதிகாரிகளால் மட்டுமே செய்யக்கூடிய காரியமா?

இதில் சம்பந்தப்பட்டுள்ள உயர் அதிகாரிகளை எப்பொழுது விசாரிக்க போகிறது தமிழக அரசு? நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு தெரியாமல் இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கா? டெண்டர் எடுத்து சாலை போடாமல் பணம் வாங்கிய ஒப்பந்ததாரர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என்று சொல்லப்படுவது உண்மைய

இந்த ஊழல் குறித்த புகார்கள் தலைமை செயலாளர் பார்வைக்கு போன பிறகு தான் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது வரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒப்பந்ததாரர் பக்கம் நின்றுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரையும், துறை உயர் அதிகாரிகளையும் வேடிக்கை பார்க்க வைத்த அந்த மேலிடம் யார் என்று FIR போட்டு விசாரித்தால் தானே தெரியும்!!

DVAC என்ன செய்து கொண்டு இருக்கிறது? நீங்க விசாரணை செய்யாவிட்டால் அறப்போர் இந்த முறைகேடு செய்தவர்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி வெளியிடும்" என்று அறப்போர் இயக்கம் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ARAPPOR IYAKKAM SAY ABOUT ROAD SCAM ISSUE


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->