#ரெய்டு : 2.37 கோடி ருபாய் பணம், 1.13 கிலோ தங்கம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை.!  - Seithipunal
Seithipunal


தங்கமணிக்கு சொந்தமான வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.2.37 கோடி மற்றும் 1.13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "P. தங்கமணி (வயது -60) சட்டமன்ற உறுப்பினர், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி என்பவர் தான் முன்பு தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தார்.

23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான அந்த காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக Rs.4,85,72,019/- சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் திரு.தங்கமணி, அவரது மகன் திரு.தரணிதரன் மற்றும் அவரது மனைவி திருமதி.சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண். 8/2021 u/s 13 (2) r/w 13 (1) (e) of the Prevention of Corruption Act, 1988 மற்றும் 109 IPC &12, 13 (2) r/w 13 (1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 என்ற பிரிவின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 69 இடங்களில் (நாமக்கல் மாவட்டம் -33, சென்னை -14, ஈரோடு -8, சேலம் -4, கோயம்புத்தூர் -2, கரூர் -2, கிருஷ்ணகிரி -1, வேலூர் -1, திருப்பூர் -1, பெங்களுர் -2, ஆந்திர மாநிலம் சித்தூர் -1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று (15.12.2021) சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேற்படி சோதனையில் பணம் ரூ .2,37,34,458 /-, தங்க நகைகள் 1.130 கிலோகிராம், சுமார் 40 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ .2,16,37,000/-, சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anti Corruption report for thankamani home andi office raid


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->