சிதம்பரம் கோயில் விவகாரம்.. இதற்கான "விளைவை சந்திக்க நேரிடும்".. திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


இந்து சமயத்தின் புனிதமான எந்த கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தை பரப்பி இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாக திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 107ன் படி இந்து சமயத்தில் உட்பிரிவுகள் நிர்வகிக்கும் கோவில்களில் தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் அத்துமீறல் போல் முந்தைய திமுக ஆட்சியிலும் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர 2009 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியதை அடுத்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு இந்த அரசாணையை திரும்ப பெற்றது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல்கள் ஏற்படுத்தி கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள நகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கை தீக்ஷர்களால் இயக்கப்பட்டு அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் இறுதியில் இருந்த இந்த திறனற்ற திமுக அரசு தொடர்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏதோ ஒரு பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதிகார வரம்பை மீறும் செயலாக சென்ற ஆண்டு மே மாதம் தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. கனகசபை மீது அனைவரும் ஏரி வழிபடலாம் என்ற அறிவிப்புடன் வெளியான அந்த அரசாணையை கூட தீக்ஷதர்கள் எதிர்க்கவில்லை. ஆணைத் திருமஞ்சனம் விழாவின்போது கோவில் நகைகள் அனைத்தும் தில்லை நடராஜருக்கு அலங்காரமாக அணிவிக்கப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக நான்கு நாட்கள் கனகசபை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இல்லாத ஒரு கோவில் அத்துமீறில் நுழைந்து கோவில் நடைமுறையில் தலையிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3500 ஏக்கர் நிலத்தை பராமரித்து வரும் தமிழக அரசின் சிறப்பு வட்டாட்சியர் கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வந்த வருவாய் கணக்குகளை தெரிவிக்கவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வரும் வருவாயை சிதம்பரம் நடராஜர் கோவிலில் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு பதில் அளிக்க வேண்டும். இந்து சமய அறநிலை தறையின் நிர்வாகத்தில் உள்ள 37,000க்கும் மேற்பட்ட கோவில்களின் வருவாய் செலவினங்களை தனியார் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட மதிக்காமல் செயல்பட்டு வரும் அமைச்சர் சேகர்பாபு தனது அதிகார வரம்பை உணர்ந்தால் நன்று. 

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுவதை கைகட்டி வேடிக்கை பார்ப்பதையும் ஆட்சியின் அவலங்களை மறைக்க கோவில்களில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவதையும் திறனற்ற திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். திறனற்ற திமுகவின் செயல்பாடுகள் இந்து சமயத்திற்கு எதிராக மட்டுமல்ல அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.

இந்து சமயத்தின் புனிதமான எந்த கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தை பரப்பி இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாக திகழும் திமுக சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேல் தலையிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai warning to DMK on Chidambaram Nataraja temple issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->