நான் தடுத்தேனா? சம்பந்தமே இல்லாம பேச கூடாது... சீமானை சாடிய அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்காததற்கு பாஜக தான் காரணம் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டு இருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்திருந்தால் நிரந்தர சின்னம் கிடைத்திருக்கும். 

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் கோரி வேறொரு கட்சி விண்ணப்பித்துள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

நிரந்தரச் சின்னம் ஒதுக்க கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இத்தனை ஆண்டு காலம் ஆக தேர்தலை போட்டிடக் கூடிய நீங்கள் ஏன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை. நாதக 6 சதவீத வாக்குகளுடன் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை எண் பெற முடியவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சம்பந்தமே இல்லாமல் எங்கப்பன் குதற்குள் இல்லை என சீமான் என் மீது பழி போடுகிறார். நியாயமாக நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சீமான் மீது தான் கோபப்பட வேண்டும். ஒரு கட்சியின் தலைவராக சீமான் தான் சின்னத்திற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும். சீமானை விண்ணப்பிக்க விடாமல் நான் தடுத்தேனா? ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து அவர் சின்னத்தை பெற்றிருக்க வேண்டும். அதை செய்யவில்லை" என சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai response to seeman allegations


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->