ரூ.2000 கோடி சொத்து! மன்னிப்பும் கிடையாது, 50 கோடியும் கிடையாது - உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி! - Seithipunal
Seithipunal


அமைச்சர் உதயநிதி குறித்து தான் வெளியிட்ட தகவல்கள், புள்ளி விவரங்கள் அனைத்துமே உண்மையானவை என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியல் மற்றும் முதல்வர் செடலின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.

இதில், முதல்வர் ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதிக்கு 2000 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

தனது சொத்து விவரங்கள் குறித்து வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இழப்பீடாக 50 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், 50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அமைச்சர் உதயநிதி அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

அதில், அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட சொத்து பட்டியல் மற்றும் புள்ளி விவரங்கள் அனைத்துமே உண்மையானவை. அதனால் இழப்பீடு தரமுடியாது.

குடும்ப அரசியல் அதிகாரத்தை அமைச்சர் உதயநிதி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பயன்படுத்தியிருப்பதும் உண்மை. அமைச்சர் உதயநிதியிடம் மன்னிப்பு கூற மாட்டேன் என்று, அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Reply to Udhayanidhi notice


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->