ஹிந்தி மொழியில் ஒன்றும் இல்லை என சொன்ன அண்ணாதுரை ஒரு முட்டாள்! - Seithipunal
Seithipunal


ஹிந்தி உட்பட பிராந்திய மொழிகளில் மருத்துவ படிப்பை துவங்க மத்திய பாஜக அரசே திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக ஹிந்தி மொழியில் பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்திற்கு மாற்ற இந்தியை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக திமுக உட்பட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இதற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றி மக்கள் மன்றத்திலும் சமூக வலைதளங்களும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு நடந்த ஒரு விவாதத்தில் வினோத் என்பவர் "மூன்று மாதங்களில் இந்தி கற்கலாம் அதற்கு மேல் அந்த மொழியில் கற்பதற்கு ஒன்றுமில்லை என அண்ணாதுரை கூறியுள்ளார்" என பதிவிட்டு இருந்தார். 

இந்த பதிவிற்கு பத்ரி சேஷாத்ரி கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் இது அபத்தமான கருத்து. இதை அண்ணாதுரை சொல்லி இருந்தால் அவரையும் முட்டாள் என்று சொல்ல வேண்டும்'' எனக் கூறியிருந்தார்  இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமூக ஊடகங்களில் திமுகவினர் பத்ரியை கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்து வந்தனர் மேலும் அவர் வகித்து வந்த தமிழ் இணைய வழி கல்விக் கழக ஆலோசகனை குழுவில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் பத்ரி சேஷாத்ரியை நீக்கி தமிழ் இணைய வழி கல்வி கழக ஆலோசனை புதிய குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் "கழகத் தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி பத்ரி சேஷாத்திரி தமிழ் இணைய வழி கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது அண்ணாவிற்கு கிடைத்த வெற்றி" என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்திருந்த பத்ரி சேஷாத்திரி "இதுதான் அண்ணாவின் வெற்றியா?" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த செந்தில்குமார் "ஆம் இது எங்கள் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களின் வெற்றி" என பதில் அளித்தார். இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் விவாத பொருளாகியுள்ளது. 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annadurai is a fool who said there is nothing in Hindi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->