எட்டு வழி சாலை தீர்ப்பு! அன்புமணியின் அடுத்த அறிவிப்பு! எகிறும் எதிர்பார்ப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது மத்திய மாநில அரசுகள் தமிழகத்திற்கு கொண்டு வந்த 8 வழி சாலை திட்டதிற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கு தீர்ப்பு பற்றி தான். ஏனெனில் இந்த வழக்கினை தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி இந்தத் திட்டத்தை கொண்டு வந்த மத்திய மாநில அரசு கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துள்ளது.  இதனால் எப்படியும் அரசுக்கு ஆதரவாகவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகவும் தான் தீர்ப்பு வரும் அதனால் பாட்டாளி மக்கள் கட்சியை கடுமையாக விமர்சித்து விடலாம் மக்கள் மத்தியில் துரோகியாக காட்டி விடலாம் என எதிர்கட்சியினர் காத்திருந்தார்கள். 

ஆனால் அதற்கு எதிர்மாறாக தீர்ப்பு வந்துவிட்டது. இதுவரை 8 வழிச்சாலை திட்டத்திற்கு அரசு அறிவித்த அனைத்து அறிவிப்பாணையையும் ரத்து செய்யப்படும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்த பேசிய, வழக்கு தொடர்ந்த பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்,  இந்த தீர்ப்பினை முழுவதுமாக வரவேற்கின்றேன். இந்தத் திட்டமானது தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத திட்டமாகும். ஏற்கனவே இரண்டு வழிகளில் சாலை வசதிகள் சென்னைக்கும் சேலத்திற்கும்  இருப்பதால் இந்த வழியானது தேவையில்லாதது. ஏற்கனவே இருக்கும் வாணியம்பாடி சேலம் செல்லும் சாலையை விரிவுபடுத்தினால் இந்த சாலை தேவையற்றவை.  அதனால் இந்த தீர்ப்பினை  அன்புடன் வரவேற்கிறேன். 

அதேபோல இந்த வழக்கின் வெற்றியானது என்னுடைய வெற்றி அல்ல. இது விவசாயிகளின் முழு வெற்றி, விவசாயிகளுக்காக நான் செய்ய வேண்டிய கடமை, விவசாயிகளை நான் கடவுளாக வணங்குகிறேன். அவர்களுக்காக நான் செய்ய வேண்டிய கடமையை தான் செய்துள்ளேன். மேலும் இதற்கும்  தேர்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் போதும் சரி, தேர்தல் அறிக்கையிலும் சரி, 8 வழி சாலை வழி திட்டம் தேவையில்லை என்று மட்டுமே நாங்கள் அறிக்கை கொடுத்திருந்தோம். அதன்படியே தான் தற்போதும் எங்கள் கொள்கையில் எவ்வித மாற்றமும் இன்றி நாங்கள் இருக்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும் இந்த வழக்கினை இதோடு விட்டுத் தாருங்கள். 8 வழி சாலை திட்டம் வேண்டாம் என தமிழக அரசிடம் வலியுறுத்த உள்ளோம். நிச்சயமாக அழுத்தம் கொடுத்து அவர்கள் மேல்முறையீடு செய்யக்கூடாது என நாங்கள் வலியுறுத்துகிறோம். விவசாயிகளின் நலனை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். எங்கள் கொள்கையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பினால் அதிமுக பாமக கூட்டணி எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ANBUMANI PRESS MEET ABOUT 8 LANE EXPRESS WAY


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->