அமமுகவை பதிவு செய்ய தடை கோரிய வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


அமமுக கட்சியை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி புகழேந்தி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய 16 பேர் சார்பில் பதிவு விண்ணப்பத்துடன் சேர்ந்த பிரமாண பத்திரத்தை அளித்துள்ளனர். ஆனால் தற்போது கட்சியாக பதிவு செய்ய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த 16 பேரும் கட்சியை விட்டு விலகியுள்ளனர். 

pugalenthi ammk, pugalenthi, ammk,

எனவே அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி புகழேந்தி வழக்கு தொடர்ந்து இருந்தார். புகழேந்தி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

ttv dinakaran, dinakaran, ttv dinakaran images, dinakaran images, ammk,

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை பதிவு செய்ய தடை கோரிய வழக்கு விசாரணையில், அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை பற்றி கவலைப்படுவதேன்?. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று  சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி பதிவு குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk case for high court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->