அம்மா உணவகத்தை இவரே மூடுவாரு! இவரே நிதி ஒதிக்கீடு செய்வாரு! வாய்பந்தல் போடாதீங்க ஸ்டாலின் -கொந்தளித்த இ.பி.எஸ்! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் திறக்கப்பட்ட 407 அம்மா உணவகங்களில் 19 அம்மா உணவகங்களை மூடியதை ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திட்டமாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அம்மா உணவகங்களுக்கு ரூ.21 நிதி ஒதுக்கினார்.

பின்னர் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாவது, அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சி செய்து விட்டு தற்போது முதலை கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தநிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?

தமிழகத்தின் அன்னலக்ஷ்மியாக செயல்படும் அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவுகளை திமுக அரசு முடிவு உள்ளது. வாய்பந்தல் போடாமல் மூடி உள்ள உணவகங்களை திறப்பதுடன் புதிய உணவகங்களை திறக்க வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amma Restaurants Why 19 Amma Restaurants Closed Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->