துப்பாக்கி சூடு சம்பவம்., உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


மேற்கு மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று வாக்குப்பதிவின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், நான்கு பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமிர்ஷா தெரிவிக்கையில்,

"மேற்கு வங்க மாநிலத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மட்டும் தான் அசம்பாவிதமாக அரங்கேறியுள்ளது. மற்ற இடங்களில் இதுவரை தேர்தல் அமைதியாக நடந்து உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்பதை என்று நான் உறுதி உறுதி அளிக்கிறேன்.

இந்த நான்கு பேரின் உயிரிழப்புக்கு மட்டுமே முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆனால் ஐந்தாவதாக இறந்த ஆனந்த் வர்மன் என்ற ராஜபக்ஷ சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இரங்கல் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நான்கு பேர் கொல்லப்பட்டதற்கும், ஐந்தாவதாக கொல்லப்பட்ட நபருக்கு இரங்கல் தெரிவிக்காமல் இருப்பதற்கும் மக்களிடம் மன்னிப்பு கேட்க மம்தா பானர்ஜிக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அவர் கண்டிப்பாக மேற்கு வங்க மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amit shah say about gun fire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->