தொடர் சோதனை... அமித்ஷாவின் பயணம் மீண்டும் ரத்து.! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக இன்று மதுரைக்கு வந்துள்ள நிலையில் மழை காரணமாக புதுக்கோட்டை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். 

காரைக்குடி, தென்காசி மற்றும் மதுரையில் வாகன பேரணி நடத்துவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தென்காசியில் அமித் ஷா பிரசாரம் செய்ய இருந்த வாகன பேரணி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மழை காரணமாக அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரையில் அவர் பா.ஜ.க வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah Pudukkottai trip cancelled


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->