குடியரசு தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் - அம்பேத்கரின் பேரன் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


குடியரசு தலைவர் தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் என்று அம்பேத்கரின் பேரன் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி, குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் நாடு முழுவதும் உள்ள மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். 

இந்த நிலையில், வருகின்ற 18-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் என்று வஞ்சித் பகுஜன் ஆகாடி தலைவராக உள்ள அண்ணல் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, 

"திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க பல பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இணைந்திருப்பதால், குடியரசு தலைவர் தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambedkars grandson say presidential race withdraw Yashwant Sinha


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->