திடீர் திருப்பம்: ஜியோ-வை ஒழிக்க., ஐடியா, வோடாபோனுடன் இணைகிறது ஏர்டெல்.!! - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ்  கம்பெனியின் ஜியோ வந்த பின் ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த ஏர்செல் என்ற நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

இன்னும் பல நெட்வொர்க் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் ஆனது ஜியோ நிறுவனத்துடன் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.

சமீபத்தில் வோடபோன் நிறுவனத்தை ஐடியா நிறுவனம் வாங்கியது. தற்போது நெட்வொர்க் சந்தையில் ஜியோ, ஐடியா வோடாபோன், ஏர்டெல் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே நாட்டில் உள்ள போட்டியாளர்களை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் ஜியோ இருந்து வருவதாகவும், மத்திய அரசு, ஜியோ நிறுவனத்தை வளர்த்து காப்பாற்றி வருவதாகவும், அதற்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் வந்துவிட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, 4ஜி அலைக்கற்றை தங்களுக்கு ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனமும் ஐடியா, வோடபோன் நிறுவனங்களுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனத்துடன் போட்டி போடும் விதமாக, ஏர்டெல், ஐடியா, வோடபோன் மூன்று நிறுவனங்களும் தங்கள் டவர்கள் அமைத்தல், மற்றும் ஆப்டிகல் ஃபைபர் திட்டங்களில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

போட்டியாளர்கள் இல்லாமல் தனி ஒரு நிறுவனம் மட்டும் இந்தியாவில் நெட்வொர்ட் சேவையை செயல்படுத்தினால், அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

airtel vodafone idia may be joint


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->