ஏர்போர்ட் மூர்த்தி விவகாரம்! அடாவடித்தனம், அதிகார அத்துமீறல்!- திமுக மீது சீமான் குற்றச்சாட்டு
Airport idol issue Arrogance abuse of power Seeman accuses DMK
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பக்கத்தில் பதிவிட்டதாவது,"புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்த திமுக அரசின் செயல் அடாவடித்தனமானது.

காவல்துறை தலைமையக வாசலில் குண்டர்கள் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்தும், பாதிக்கப்பட்டவர்மீதே பொய்வழக்கு பதிந்து சிறையில் அடைத்திருப்பது அதிகார அத்துமீறலின் உச்சம்.
இது வெளிப்படையான பாசிச வெறியாட்டம். ஆட்சியின் அகந்தைக்கு நாட்கள் குறைந்து விட்டன; விரைவில் வீழ்ச்சி தவிர்க்க முடியாது”என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Airport idol issue Arrogance abuse of power Seeman accuses DMK