அதிமுக வழக்கில் திடீர் திருப்பம் - முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உச்சநீதிமன்றத்தில்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில்  முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சசிகலா உச்சநீதிமன்றல் கேவியர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரின் அந்த கேவியட் மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் இந்த கேவியட் மனுவை பொறுத்தவரை : பொதுச் செயலாளா் பதவியிலிருந்து தன்னை நீக்கிய தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி, சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். 

இந்த வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியின் மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி, சசிகலாவின் வழக்கை நிராகரித்தது.

இதனை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உதவி பிறப்பித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு எதிராக எவரேனும் மேல்முறையீடு செய்தால், தனது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று, சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தற்போது கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK OPS vs EPS SC Case Sasikala


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->