#BigBreaking | போட்டி வேட்பாளர் அறிவிப்பு | இரட்டை இலை சின்னம் வேண்டுமா? எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு கொடுத்த ஓபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதல்வர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் இன்று தனது போட்டி வேட்பாளரை அறிவித்துள்ளார். ஓ பன்னீர்செல்வத்தின் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, "ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுவார்.

ஒருவேளை பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், எங்களது தரப்பு வேட்பாளரை வாபஸ் வாங்கி விடுவோம். இரட்டை இலை கிடைப்பதற்கு எந்த காலத்திலும் நான் தடையாக இருக்க மாட்டேன்.

உள்ளாட்சித் தேர்தலின் போது கூட இரட்டை இலை சின்னத்திற்கான படிவத்தில் நான் கையொப்பமிட்டு மகாலிங்கத்திடம் அனுப்பினேன். நான்கு நாட்கள் கழித்து பதில் தருவதாக கூறினார்கள். ஆனால், ஒரு வாரம் வரை காத்திருந்தேன் எந்த பதிலும் வரவில்லை.

ஆகவே இரட்டை இலை சின்னம் முடங்க நான் காரணம் இல்லை. எந்த காலத்திலும் அதற்க்கு நான் காரணமாக இருக்கப் போவதும் கிடையாது.

இப்போதும் என்னிடம் அவர்களின் வேட்பாளருக்காக படிவத்தை கொண்டு வந்து கொடுத்து கையொப்பமிட சொன்னால், நான் அதிமுக ஒருங்கிணைப்பாளராக கையொப்பமிட தயாராக தான் இருக்கிறேன்.

என்னால் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கோ, தடையாகவோ நான் இருக்க மாட்டேன்" என்று ஓ பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK OPS VS EPS issue ops side candidate announce erode


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->