ஓபிஎஸ்-ஐ 'நம்முடைய அண்ணன்' என்ற செங்கோட்டையன்! பெருந்தன்மையா? என்று கொந்தளித்த செம்மலை! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் தென்னரசு அவர்களை பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளார்கள். அது குறித்த ஆவணங்களை இன்று தேர்தல் ஆணையத்திடம் அனைத்து அவைத்தலைவர் ஒப்படைத்தார்.

நாளை பகல் 12 நபுஜ்ஜய அதிமுக வேட்பாளர் வேட்புமனுத்தாக்கள் செய்ய உள்ளார். இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றதுடன், இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு நாங்கள் வாக்கு சேகரிப்போம் என்று, ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், 'நம்முடைய அண்ணன்' என ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றது பெருந்தன்மை அல்ல, பெருந்தன்மை உள்ளவர் நீதிமன்றத்தை நாடியது ஏன்? என்று செம்மலை கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், இரட்டை இலைக்கே ஆதரவு என்று சொல்லும் ஓபிஎஸ் தரப்பினர், வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்ல மாட்டேன் என்பது சரியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK OPS EPS ErodeEastByElection Sengottaiyan Semmalai 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->