வேஸ்ட் லக்கேஜ் "பாஜகவால்" தோற்றுப் போனேன்..! - அதிமுக ஜெயக்குமார் - Seithipunal
Seithipunal


தமிழக தேர்தல் களத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையான கருத்து முதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர் "கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக ஆட்சியை பரிப்போனது. ராயபுரத்தில் தோற்கிற ஆளான நான்? கடந்த 25 வருடங்களாக முடி சூடா மன்னனாக ராயபுரம் பகுதியில் இருந்து வந்தேன். 

தோல்வி என்பதையே நான் அறியவில்லை ஆனால் பாஜகவால் தோல்வியடைந்தேன்.. பாஜக உடன் கூட்டணி இல்லை என்றால் நான் சட்டமன்றத்திற்கு சென்று இரப்பேன். பாஜக உடனான கூட்டணியால் தான் 40,000 சிறுபான்மையினர் மக்கள் வாக்குகள் எனக்கு எதிராக விழுந்தது. 

அவர்களுக்கு என் மீது கோபம் கிடையாது, பாஜக மீது தான் கோபம். பாஜகவை கழட்டி விட்டு வாருங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் என சொன்னார்கள். அவர்களிடம் பாஜக வேஸ்ட் லக்கேஜ் தான், என்ன செய்ய சமயம் வரும்போது கழட்டி விடுகிறோம் என்று சொன்னேன். அதேபோல நேரம் வந்தது பாஜகவை கழட்டி விட்டு விட்டோம்" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK jayakumar criticized BJP was waste luggage 14042024


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->