மோடியின் Show.. ஒரே ஒரு உதாரணம்.. மொத்தமா சிதைத்த ஜெயக்குமார்.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். நேற்று மாலை 6 மணி அளவில் தி.நகரிலிருந்து பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சாலை பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "பிரதமர் மோடி கலந்து கொண்டது ஒரு ஷோ அவ்வளவுதான். அதனால எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவும் தேசிய கட்சிகளும் இணைந்து துரோகம் செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. 

ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என வாக்குறுதி அளித்த மத்திய பாஜக 10 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி விட்டார்களா? நாடு முழுவதும் ஏழைகளே இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டார்களா? 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1987-ல் மறைவுக்குப் பிறகு ஜி.கே மூப்பனார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை 14 முறை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். அப்போது குடிசைக்கு உள்ள சென்று கஞ்சி குடிப்பது, கூழ் குடிப்பது, கட்டிப்பிடிப்பது என செய்தார்கள். ஆனால் காங்கிரஸ் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறவில்லை. 

அதன்படி தற்போது பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. பாஜகவின் 4 சதவீத வாக்கு 5 சதவீதமாக உயரம், அவ்வளவுதான். தமிழகத்தில் களநிறுவனத்தைப் பொறுத்தவரையில் அதிமுகவும் திமுகவும் தான். 

சமூக வலைதளங்களை வைத்துக்கொண்டு பாஜக தான் பெரிய கட்சி என காண்பித்துக் கொண்டால் உண்மைத் தன்மை மாறி விடுமா? திமுகவை பிடிக்காதவர்கள் அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். திமுக மீது உள்ள வெறுப்பு காரணமாக வெற்றி பெறும் கட்சிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் அது அதிமுக மட்டும் தான். 

தோற்கப் போகும் பாஜகவுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை மக்கள் வீணடிக்க மாட்டார்கள். தென் சென்னையில் பாஜகவுக்கு வேட்பாளர் இல்லை என்பதால் ஆளுநர் தமிழிசையை ராஜினாமா செய்து விட்டு போட்டியிட வைத்துள்ளனர். மக்கள் அவர்களின் வாக்குகளை வீணடிக்க மாட்டார்கள். அதிமுகவுக்கு வாக்களித்து திமுகவுக்கு பொதுமக்கள் தான் தக்க பாடம் புகட்டுவார்கள்" என கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK jayakumar criticized BJP Narendra Modi roadshow


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->