கூட்டணி களேபரம்! பாஜக எடுத்த அதிரடி முடிவு! எடப்பாடி பழனிசாமியின் நிலை என்னவோ.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்தித்தபோது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதான் எங்க கட்சி முடிவு என ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியதற்கு அதிமுக தலைமையிலிருந்து எந்த வித மறுப்போ, எதிர்ப்போ வெளியாகவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு சில தலைவர்கள் தன் தன்மானத்தை சீண்டுவதால் அதற்கு எதிர்வினை ஆற்றாமல் இருக்க முடியாது என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளான எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம், தங்கமணி, கே.பி முனுசாமி ஆகியோர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரை நேரில் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதனை அதிமுக தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

டெல்லி சென்றுள்ளதாக கூறப்படும் 5 முக்கிய நிர்வாகிகளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ஜெயலலிதா குறித்து பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

பரபரப்பான இந்த அரசியல் சூழலில் டெல்லிக்குச் சென்ற அதிமுக குழுவினர் தற்போது தமிழகம் திரும்புகிறது. அதிமுக தரப்பு வைத்த நிபந்தனையை பாஜக தலைமை நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக டெல்லியில் இருந்து திரும்பும் அதிமுக நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் கூட்டணியில் பாஜக நீடிக்கிறதா அல்லது கூட்டணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதா என்ற அதிகாரப்பூர்வ தகவலை அதிமுக தலைமையிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK executives returns to TN after met BJP leaders


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->