ஓபிஎஸ் மீது அதிமுக தரப்பு பரபரப்பு புகார்.!! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 

நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.  அப்போது அங்கு வந்த ஓபிஎஸ் தேர்தலில் விதிகளை மீறியதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே.என் கருணாகரன் அளித்த புகார் மனுவில் "இன்று (நேற்று) 30.03.2024 மாலை சுமார் 4 மணியளவில் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. 

மேற்படி கூட்டத்திற்கு ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் த/பெ ஒட்டக்காரதேவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சுமார் 20 கார்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு காவலர் தடுப்புகளை மீறி அத்துமீறி வந்தார்.

அவருடைய செயல் தேர்தல் விதிகளை மீறிய செயல். ஆகையால் மேற்படி நபர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் வரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK complaint against Ops in Ramanathapuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->