உலக அளவில் இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி!! - Seithipunal
Seithipunal


திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 32வது பட்டமளிப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார். பின்னர் மாணவ மாணவியிடம் ஆளுநர் ரவி பேசுகையில்,

பட்டம் பெற்றுள்ள மாணவர்களாகிய நீங்கள் இப்போது முக்கியமான காலகட்டத்துக்குள் நுழைந்து உள்ளீர்கள்.
பத்தாண்டுகளுக்கு முன் கண்ட இந்தியா அல்ல இது, இப்போது டிஜிட்டல்மையமாகவும், தன்னம்பிக்கை சுயசார்பற்ற புதிய இந்தியா உருவாகியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த உலக நாடுகளில் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான உலக அறிவு சார்ந்த அறிக்கைப்படி இந்தியா முன்பு இல்லாத அளவுக்கு 21 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. உலக அளவில் இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India has become the 5th largest economy in the world Tamil Nadu Governor RN Ravi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->