விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் அதிமுகவின் 2ம் கட்ட தலைகள்.. எங்களோட வாங்க.. பவன் கல்யாண்போல் ஆகலாம்..பின்னணி இதுதான்!
AIADMK 2nd phase leaders invite Vijay to join the alliance Come with us Pawan may become like KalyanThis is the background
நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்ததும், அதிமுகவில் ஒரு புதிய அரசியல் இயக்கம் தொடங்கியது போல தெரிகிறது. ஏனெனில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஆரம்பத்திலிருந்தே “தமிழக வெற்றிக் கழகம்” மீது தனிப்பட்ட பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்,“விஜய்யை விமர்சிக்க வேண்டாம்,”என்று எடப்பாடி பழனிசாமி நேரடியாக அறிவுறுத்தியிருந்தது. அதனால், விஜய் சில நேரங்களில் அதிமுக குறித்து விமர்சித்தாலும், கட்சித் தலைவர்கள் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில், அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், தவெக தரப்பில் வந்த பெரிய கோரிக்கைகள் காரணமாக பேச்சுவார்த்தை தடைபட்டது. உடனே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டது.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமியின் மனதில் ஓர் எண்ணம் மட்டும் உறுதியானது –“விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்!”
சமீபத்தில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடியை பார்த்த எடப்பாடி,“கொடி பறக்குது… பிள்ளையார் சுழி போட்டாச்சு!”என்று உற்சாகமாக கூறினார்.
அதேபோல் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதோடு, சட்டசபையிலேயே தவெக குரலாக அவர் பேசினார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு ஆகியோரும் விஜய்யை கூட்டணியில் சேர வேண்டுமென திறந்தவெளியில் பேசியுள்ளனர்.
இப்போது எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நம்பிக்கையாளர் ஆர்பி உதயகுமார், விஜய்க்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ளார் –“திமுகவை வீழ்த்தும் சக்திகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நிற்க வேண்டும்.நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும்.சரியான முடிவு எடுத்தால் வெற்றி உறுதி!”
அவர் மேலும் கூறியதாவது,“சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி தோல்வியடைந்தார், ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து இன்று துணை முதல்வராக உள்ளார்.விஜய்யும் அதிமுகவுடன் இணைந்தால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள்.”
இந்தக் கருத்துகளில், விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்ற மறைமுக செய்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.
ஏற்கனவே பாஜக உடன் அதிமுக கூட்டணி இருந்தாலும், களநிலவரம் அவர்களுக்கு சாதகமாக இல்லை. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஆதரவு குறைவாக இருப்பதால்,“விஜய்யை கூட்டணியில் சேர்த்தால்தான் வெற்றி சாத்தியம்,”
என்பதே அதிமுகவின் அரசியல் நம்பிக்கை.
இப்போது தமிழக அரசியலில் பெரிய கேள்வி –விஜய் தனியாகப் போட்டியிடுவாரா? அல்லது அதிமுகவுடன் சேருவாரா?
ஆனால் ஒரு விஷயம் உறுதி –எடப்பாடி பழனிசாமியும் அவரது அணியும், விஜய்யை தங்கள் பக்கம் இழுக்கும் அரசியல் திட்டத்தை நிறுத்தப் போவதில்லை.
English Summary
AIADMK 2nd phase leaders invite Vijay to join the alliance Come with us Pawan may become like KalyanThis is the background