எம்ஜிஆரை பெரியப்பானு சொல்றீங்க.. மனசாட்சி அதை ஏற்றுக் கொள்கிறதா..? ஸ்டாலினுக்கு ஆர்.பி உதயகுமார் கேள்வி..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக இன்று மதுரை மாவட்டத்திற்கு சென்று இருந்தார். அப்பொழுது அவர் மதுரையில் அமைந்துள்ள தமிழ் சங்கத்தினை பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எம்ஜிஆரை பெரியப்பா என கூறும் ஸ்டாலின் மதுரை தமிழ் சங்கத்தில் அவருடைய படம் அகற்றப்பட்டதை கள ஆய்வு செய்தாரா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது "உலகத்தமிழ் சங்கத்தை மதுரையில் நடத்தி எட்டாவது வள்ளலாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திகழ்ந்து வருகிறார். உலகத் தமிழ் சங்கத்தில் எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படம் தற்பொழுது அகற்றப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆரை முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி பெரியப்பா என்று கூறி வருகிறார். தற்பொழுது தமிழ் சங்கத்திலிருந்து எம்ஜிஆர் படம் அகற்றப்பட்டது அவர் கவனத்திற்கு வந்ததா..? உலக தமிழ் சங்கத்தில் இருந்து எம்ஜிஆர் படத்தை அகற்றி இருப்பதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பெரியப்பா என்ன கூறும் உங்கள் மனசாட்சி அதை ஏற்றுக் கொள்கிறதா..? அண்ணாவின் தலைமையில் இயங்கி வந்த திமுகவை தன் திரைப்படங்கள் மூலமும் தான் செல்லும் இடங்களிலும் வளர்க்க பாடுபட்டவர் எம்ஜிஆர்.

மதுரை கள ஆய்வுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வில் முதலில் எம்ஜிஆர் படம் எங்கே போனது என்று உலகத் தமிழ் சங்கத்தில் பணிபுரிவோரிடம் கேள்வி எழுப்பி மீண்டும் அவர் படத்தை அங்கு வைத்திருந்தால் எம்ஜிஆர் பக்தர்கள் உங்களை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். திமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்களின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது போல் எம்ஜிஆர் அவர்களின் படமும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது" என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Udayakumar questions about MGR photo being removed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->