காலைலயே நல்ல செய்தி - பெருமூச்சு விட்ட ராஜேந்திர பாலாஜி! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை, தனியார் பால் நிறுவனங்கள் வாபஸ் பெற்றுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தனியார் பால் நிறுவனங்கள், தற்போது நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளன.

அதிமுக ஆட்சி காலத்தின் போது, பல்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, "தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுகிறது" என்று பேசி இருந்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த தனியார் பால் நிறுவனங்கள், தரமற்ற பால் விற்கப்படுவதாக ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கடந்த 2017-ல் தொடர்ந்த இவ்வழக்கில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக பால் நிறுவனங்கள் தரப்பு தற்போது உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், தனியார் பால் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, வழக்கை வாபஸ் பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி இன்று ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Rajendra balaji 2017 case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->