#BigBreaking | உச்சநீதிமன்ற தீர்ப்பில் இந்த ஒரு பாய்ண்ட் போதுமே., இபிஎஸ்.,க்கு அதிர்ச்சி ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஓபிஎஸ், பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது ஓபிஎஸ் தெரிவித்ததாவது, "உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு தான் எங்களுடைய தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியில் உள்ளனர். இனி இடைத்தேர்தல் வந்தாலும், எந்த தேர்தல் வந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா காப்பாற்றிய சட்டத்தினை தான் நாங்கள் காப்பாற்ற இருக்கிறோம்.

ஒன்றை கோடி தொண்டர்களும் அதனையே கடைப்பிடிக்க உள்ளோம். மக்களை நாடி நாங்கள் நீதி கேட்போம். அதிமுக தலைவர்கள் வகுத்துக் கொடுத்த சட்ட விதிகளை காக்க போராடுவோம். அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். 

இது என்னுடைய தாத்தா, எடப்பாடி பழனிசாமி தாத்தாவும் உருவாக்கிய கட்சி அல்ல. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்படவில்லை" என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ தெரிவித்ததாவது, "அதிமுக பொதுக்குழு என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என ஒரு வார்த்தை கூட இல்லை.

பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்று மட்டும்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; அதன் தீர்மானங்கள் குறித்து எந்த வரியும் இல்லை. தீர்மானங்களை எதிர்த்து நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது; எனவே, உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும்" என்று  மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.


ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தாவது, "புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை. மார்ச் மாதத்துக்குள் நாங்கள் மக்களை சந்தித்து நீதி கேட்க உள்ளோம். தமிழ்நாட்டில் சேலமாக இருந்தாலும், எங்கு என்றாலும் நாங்கள் சென்று நீதி கேட்போம்" என்றார்.


பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துவது, "பொதுக்குழு கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான் கையெழுத்திட வேண்டும் என்று அதிமுக விதி உள்ளது.

பொதுக்குழு கூட்டியது சரி என்று சொல்லிவிட்டு, அதில் நிறைவேற்ற தீர்மானங்களை பற்றி நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் சொன்னது, தங்களுடைய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டதாக கருத தோன்றுகிறது. 

ஆனாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற காரணத்தினால் எங்கள் தரப்பு நியாயங்களை என்ன என்பதை அவர்களிடம் விளக்க போதுமான அளவுக்கு எங்களுக்கு திறமை இல்லையோ என்று நாங்கள் கருதுகிறோம்" என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS Vs EPS SC Order 24022023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->