ஓபிஎஸ் சந்திப்புக்கு பின் முடிவை மாற்றிய ஜான்பாண்டியன்! அதிர்ச்சியில் அதிமுகவினர்! - Seithipunal
Seithipunal


தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், இரட்டை இலை சின்னம் இருக்கிறதோஅவர்களுக்கு ஆதரவு என்று, இன்று காலை எடப்பாடி பழனிசாமி தரப்பினரை சந்தித்தபின் தெரிவித்திருந்தார்.

மாலை ஓ பன்னீர்செல்வத்தின் சந்திப்புக்கு பிறகு, பாஜக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறதோ அதற்கு எண்களின் ஆதரவு என்று, ஜான்பாண்டியன் தெரிவித்திருப்பது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஜான்பாண்டியனை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன் தெரிவிக்கையில், "அண்ணா திமுக யாரிடம் இருக்கிறது? பொதுக்குழு யாரை முடிவெடுக்கிறதோ அவர்கள் தான் அதிமுக. அதன் அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும்.

கண்டிப்பாக இரட்டை இலை சின்னம் யாரிடம் உள்ளதோ, அவர்களுக்கு தான் ஆதரவு கொடுக்க முடியும். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

மாலை ஜான்பாண்டியன் - ஓ பன்னீர்செல்வத்துடன் சந்திப்புக்கு பிறகு, ஜான்பாண்டியன் அளித்த பேட்டியில், "இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். அது இல்லாத பட்சத்தில், பிஜேபி தனித்து நின்றால் நாங்கள் நிச்சயமாக ஆதரவை கொடுப்போம். 

அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. என்டிஏ கூட்டணியில் தமிழகத்தை பொறுத்தவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தலைமை. எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலையா? தாமரையா என்று சொல்லும் பொழுது, அவர்களுக்குள் ஒரு முடிவு எடுத்து யார் வருகிறார்களோ அவர்களுக்கு எங்களின் ஆதரவு நிச்சயம் உண்டு" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS VS EPS Erode By Election TMMK


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->