ஓபிஎஸ்-இபிஎஸ் விவகாரம் | நாளை மறுநாள் நடக்குமா அந்த சந்திப்பு?! - Seithipunal
Seithipunal


நாளை மறுநாள் தமிழகம் வரும் மத்திய உத்திரைய அமைச்சர் அமித்ஷா, ஓபிஎஸ்-இபிஎஸ்.,யை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிமுகவின் பொதுக்குழுவால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என்று ஓபிஎஸ் ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற அதிமுகவின் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி கே பழனிசாமி, எக்காரணம் கொண்டும் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதிமுகவின் பொதுக்குழுவால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று, திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருக்கிறார்.

அவர் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரையும் அழைத்துப் பேச இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.

2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், அமித்ஷா முன்னிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவார்களா அல்லது எடப்பாடி பழனிசாமி அறிவித்தது போல ஓபிஎஸ் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லையா என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS EPS Issue Amitsha Chennai Visit


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->