ஓபிஎஸ்., இபிஎஸ்., தலைமையில் வேட்பாளர் நேர்காணல்.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக விருப்பமனு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளனர். 

அதிமுகவில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் இறுதி நாளான இன்று வரை 8200க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் சுமார் 3000 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் ஓபிஎஸ்., இபிஎஸ்., நேர்காணல் செய்ய உள்ளனர்.

இன்று காலை 9 மணி முதல் மாவட்டம் வாரியாக நேர்காணல் நடைபெற உள்ளது. இன்று ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ops eps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->