அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு! வெடித்ததா மோதல்?!  - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவது குறித்து விவாதிக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வது, அந்தந்த மாவட்ட வாரியாக கட்சிப்பணிகளை பிரித்தல், கூட்டணி உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதம் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஓபிஎஸ் வருகையின்போது, 'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு' என தொண்டர்கள் கோஷம் எழுப்பிவே, ஈபிஎஸ் வரும்போதுதொடர்கள், 'நிரந்தர முதல்வர் எடப்பாடியார்' முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MEETING SOME INFO


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->