ஈபிஎஸ் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த ஆலோசனை கூட்டம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கினார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். 

அப்போது பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதா பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாட வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் துடிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

வருகிற 30-ஆம் தேதி மதுரை டி. கல்லுப்பட்டி, டி. குன்னத்தூரில் ஜெயலலிதா கோவிலை திறந்து வைக்க வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்பது, நல உதவி வழங்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் ஓய்வறியா உழைப்பினை ஒருங்கிணைத்து, அரவணைத்து செயல்படுத்தி தேர்தல் பணியை முன்னெடுத்து சென்றிடவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா அரசு மீண்டும் அமைய துணை நின்று உழைப்போம் என்று இக்கூட்டத்தில் சபதம் ஏற்றுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk meeting on jan 19


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal