அதிமுக மாநாடு! கடைசி நேரத்தில் டிஜிபிக்கு சென்ற புகார்! அடித்து ஆடும் ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் மதுரை மாநாட்டிற்காக அனுமதி இன்றி தமிழகம் முழுவதும், குறிப்பாக மதுரை செல்லும் சாலைகளில் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது என்றும், இதனால் விபத்துக்கள் ஏற்பட காரணமாக அமையும் என்றும், உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி இடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த மனுவில், "மதுரையில் மாநாடு நடத்துகிற எடப்பாடி பழனிசாமியும் அவரது அணியினரும் சட்டத்திற்கு புறம்பாக கட்டவுட்டுகளை தமிழ்நாடு முழுவதும் வைத்திருக்கிறார்கள்.

இது தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளுக்கு எதிர்ப்பான செயல்பாடாகும்.

உடனடியாக இதுபோன்ற கட்டவுட்களை அகற்ற வேண்டும். கட்டவுட் மூலம் கடந்த காலங்களில் பல இறப்புகள் ஏற்பட்டுள்ளது. மதுரை வரை வழி நெடுக இந்த விளம்பர தட்டிகள் கட்டவுட்டுகள் மூலம் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

இப்படி நடத்துகின்ற மாநாடு சட்டம் ஒழுங்கை மீறி நடத்துகிற மாநாடாக கருதப்படும். இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது, கட்டவுட் மூலமாக விபத்தில் இறந்த பள்ளிக்கரணை சுபஸ்ரீ (வயது 23) பெண்ணிற்காக கடும் கண்டனத்தை தெரிவித்து, அன்றைய அண்ணா திமுக அரசு மீது குற்றம் சாட்டினார்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்குகள் தொடரப்பட்டது. கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படிப்பட்ட விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் நடந்துள்ளது என்பதனை நினைவு கூற விரும்புகிறேன்" என்று அந்த மனுவில் வா புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமான ஆதாரங்களையும் அவர் மனு உடன் இணைத்து புகார் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Maanadu Cutout issue OPS Side complaint to DGP


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->