ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதல்.. அதிமுகவில் கேள்விக்குறியாகும் 34 கவுன்சிலர் பதவிகள்.. குழப்பத்தில் வேட்பாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு என 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 510 பதவியிடங்களில், 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. 

உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே மனு தாக்கல் செய்ய இன்று மாலை கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றே கடைசி தினம் என்பதாக் குழப்பத்தில் வேட்பாளர்கள் உள்ளனர்.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும்  மாநகராட்சி கவுன்சிலர்  உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk local body election issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->