நாளை இறுதி விசாரணை! அதிமுகவின் வருங்கால தலையெழுத்தாக அமையப்போகும் தீர்ப்பு எப்போது! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் (வைரமுத்து) தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், "ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு ஆண்டுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் தேவைப்பட்டிருக்காது.

அப்போது அதனை செய்யாத எடப்பாடி பழனிச்சாமி, தற்போது புதிய பதவிகளை உருவாக்கியதற்கு பின்னர், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது.

கட்சியின் எந்த முடிவையும் இருவரும் இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி ஆகும். கட்சி தலைமை அலுவலகம், தேர்தல் முடிவுகள், நிர்வாகிகள் நியமனம் என அனைத்திலும் இருவரின் முடிவு இணைந்து எடுத்தால் மட்டுமே அது செல்லத்தக்கது" என்று வாதங்களை முன் வைத்தார்.

வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தனர். 

நாளைய தினம் இருதரப்பும் தங்களது இறுதி வாதங்களை நிறைவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்க்கு ஏற்றார் போல் இரு தரப்புக்கும் நேரம் ஒதுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கை இந்த வாரத்தில் முடிக்க (தீர்ப்பு அளிக்க) விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK General Council Case Supreme Court ops vs eps


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->