#BREAKING || 4 மாநகராட்சிக்கு அடிப்போடும் பாஜக., விரட்டும் அதிமுக., சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாளை அல்லது நாளை மறுநாள் இடப்பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில்,சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தலைவர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களை கேட்டு பெற முடிவு செய்து உள்ளது.

இந்நிலையில் அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியான தகவலின்படி, மாநகராட்சிகளில் அதிக இடங்களை வழங்க முடியாது என அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், அதே சமயத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களைத் தர அதிமுக முன்வந்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
குறிப்பாக கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 மாநகராட்சிகளை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அக்கட்சி வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK BJP Alliance meet 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->