உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியல் என குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது - நடிகை கஸ்தூரி.! - Seithipunal
Seithipunal


உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியல் என பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளதாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும், திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியல் என பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளதாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் 'வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. உங்களுடைய மகன்கள், மருமகன்கள், மைத்துனர்கள் போல் அல்லாமல். தன்னுடைய சக்தி வாய்ந்த பெற்றோரால் வெற்றியையும் பதவியையும் உதயநிதி பெற்றுள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் ஒரு திறமையான மற்றும் தகுதியான அரசியல்வாதி. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற எல்லா எம்.எல்.ஏ.வுக்கும் எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை உதயநிதிக்கும் உள்ளது' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kasthuri tweet about udhayanithi Stalin


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->