கோடைகால நோய்களை தடுப்பது எப்படி.? இதோ எளிய வழிமுறைகள்.! - Seithipunal
Seithipunal


வெயில் காலத்தில் காது மூக்கு தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் பலருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுப்பது என்பதை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோடை களத்தில் காது மூக்கு தொண்டை பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. அதற்கு காரணம் உடலில் நீர்ச்சத்துக்கள் குறைவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக வெயில் காலங்களில் குளிர்ந்த பானங்கள் குடிப்பதால் மூக்கடைப்பு தும்மல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதன் காரணமாக காது வலி மற்றும் தொண்டை வலியும் ஏற்படுகிறது.

இதில் சிலருக்கு உடல் சூட்டின் காரணமாக காதிலிருந்து ரத்தம் வருகிறது. மேலும் சிலருக்கு உடல் சூட்டின் காரணமாக மலம் கழிக்கும் போதும் ரத்தத்துடன் வெளியேறுகிறது.

எனவே என் காலங்களில் குளிர்ந்த பானத்திற்கு பதிலாக எப்போதும் அருந்தும் நீரையே குடிக்கலாம். மேலும் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கிறது.

வெயில் காலங்களில் அதிகமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக 12 மணி முதல் மூன்று மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் உடலை சாதாரண வெப்ப நிலையில் வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips to prevent summer season health issues


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->