பார்த்தவுடன் உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றுகிறதா.?!  - Seithipunal
Seithipunal


ஒரு உணவைப் பார்த்ததும் உங்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்த எண்ணம் எதன் அடிப்படையில் தோன்றுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

அது பல வண்ணங்களில் இருப்பதால் உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா? இல்லை அந்த உணவின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா?

இதைப் பற்றி தாங்கள் சிந்தித்தது உண்டா? ஆனால் உண்மையில் உணவின் நிறத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

பச்சை நிற உணவுகள் :

பச்சை பீன்ஸ், பச்சை குடைமிளகாய், கீரை வகைகள், பச்சைப் பட்டாணி, கிரீன் டீ போன்ற பச்சை நிற உணவுகள் உடலின் நச்சுத் தன்மையை வெளியேற்றுகின்றன.

இவ்வகை உணவுகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

மஞ்சள் நிற உணவுகள் :

வாழைப்பழம், சோளம் போன்ற மஞ்சள் நிற உணவுகள் உடல் பொலிவடைவதற்கு உதவுகின்றன.

இவ்வகை உணவுகளில் கரோட்டினாய்டு மற்றும் பயோ பிளேவனாய்டு நிறைந்திருக்கின்றன.

எனவே இவை நமது சருமம், எலும்பு மற்றும் பற்களைப் பாதுகாக்கின்றன.

ஆரஞ்சு நிற உணவுகள் :

கேரட், ஆரஞ்சு, பரங்கிக்காய் போன்ற ஆரஞ்சு நிற உணவுகள் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன.

இவ்வகை உணவுகள் கண்களைப் பாதுகாக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

சிவப்பு நிற உணவுகள் :

தக்காளி, ஆப்பிள், சிவப்பு மிளகாய், செர்ரி பழம் போன்ற சிவப்பு நிற உணவுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

ஊதா நிற உணவுகள் :

நாவல்பழம், வெங்காயம், கத்திரிக்காய், திராட்சை போன்ற ஊதா நிற உணவுகள் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றன.

மேலும் இதயத்துக்கும், கல்லீரலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கவும் மற்றும் நமது ஆயுளை அதிகரிக்கவும் இந்த வகை உணவுகள் உதவுகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

secret of food colors


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->