தினமும் குழம்பு செய்து போர் அடிக்கிறதா? அப்போ இதை செய்து பாருங்க.! - Seithipunal
Seithipunal


தினமும் குழம்பு செய்து போர் அடிக்கிறதா? அப்போ இதை செய்து பாருங்க.!

முட்டைக்கோசில் அதிகளவு கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும், வைட்டமின் சி, தியாமின், நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. 

இதில் அதிக நார்ச்சத்தும் உள்ளது. இது பித்த அமிலங்களை பிணைப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. முட்டைக்கோஸ் பொறியல் சாப்பிட விரும்பாதவர்கள், முட்டைக்கோஸ் பருப்பு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-

பாசி பருப்பு, முட்டைக்கோஸ், மஞ்சள் தூள், தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், உப்பு

செய்முறை

முதலில் பருப்பு மற்றும் நறுக்கிய முட்டைக்கோஸை ஒரு தடிமனான பாத்திரத்தில் எடுத்து நன்கு கழுவி அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இதற்கிடையில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், டீஸ்பூன் சீரகம், சிறிது உப்பு ஆகியவற்றை ஒரு ஜாரில் எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்டாக அரைக்கவும்.

பருப்பு வெந்ததும் அதனுடன் தேங்காய் விழுதைச் சேர்த்து, சுவைக்குத் தேவையான உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
அவ்வளவு தான்,சுவையான முட்டைக்கோஸ் பருப்பு தயார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

recipe of muttaikos paruppu


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->