சட்டுன்னு சுவையான இறால்  பிரியாணி ரெஸிபி இதோ.! குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கிலோ 
அரிசி - 2 கப்
தண்ணீர் - 3 கப்     
ஆயில் - 2 டீ ஸ்பூன்  
நெய் - 2 டீ ஸ்பூன்
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
பட்டை - 1 துண்டு 
பிரிஞ்சி இலை - 1
வெங்காயம் - 2
பூண்டு - 4
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - 1 கொத்து 
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்  
கரம் மசாலா - 2 டீ ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி பொன்னிறமானதும் பூண்டு பச்சை மிளகாய் கொத்தமல்லி இலைகள் சேர்த்து அரைத்து வெங்காயத்தில் சேர்த்து நன்றாக வதங்கியவுடன் தக்காளி, கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து வதங்கியப்பின் இறால் சேர்த்து கிளறி விடவும்.

2 நிமிடம் கிளறியபின் மசாலா சேர்ந்ததும் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசி சேர்த்து உப்பு சேர்த்து கலந்தப்பின் கொதிக்க விட்டு குக்கரை மூடி மிதமான தீயில் ஒரு விசில் விட்டு உடனே திறக்காமல் சிறிது நேரம் தம்மில் இருக்கவிட்டு திறந்தால் சுவையான இறால் பிரியாணி சுவைக்க தயார்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pron Briyani recipe For kutties


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->