ஆரஞ்சு பழத்தில் அட்டகாசமான பிரியாணி.! குட்டீஸ் ஸ்பெஷல்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

ஆரஞ்சு பழம் - 5
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
வெங்காயம் - 3
புதினா இலை - 1 கைப்பிடி
கேரட் - 1 அல்லது 2
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டேபுள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவி கொள்ளவும். புதினா, கொத்தமல்லித் தழையை நறுக்கி கொள்ளவும்.

அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஆரஞ்சு பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கி அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அதன் பின் ஆரஞ்சு ஜஸை சேர்த்து கொதிக்க வைக்கவும். 

கொதித்ததும் ஊற வைத்த அரிசியை போட்டு உப்பு சரி பார்த்து மூடவும்அரிசி முக்கால் பதம் வெந்ததும் குக்கரை திறந்து கிளறி விட்டு துருவிய கேரட் சேர்த்து மீண்டும் குக்கரை மூடி 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

orange briyani special preparation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->