இந்த வெயில் காலத்துல 'ஏசி' நாள் முழுக்க ஓடினாலும் கரெக்ட் பில் குறைவா வரனுமா.? அப்போ இது உங்களுக்கு தான்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது கோடை காலம்  வந்துவிட்டதால் வெப்பநிலை உச்சத்தை தொட்டிருக்கிறது. அனேகமான பகுதிகளில் பூமி வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவில் தற்போது கோடை காலம்  வந்துவிட்டதால்  வெப்பநிலை உச்சத்தை தொட்டிருக்கிறது. அனேகமான பகுதிகளில் பூமி வெப்பமயமாதல் காரணமாக  கடுமையான வெப்பமும் உஷ்ணமும் நடவுகிறது.

இத்தகைய சூழலில்  ஏசி அல்லது ஏர்கூலர் இல்லாமல் நமது பகல் பொழுதையும் இரவையும் கழிப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. தற்போதிருக்கும் வெப்ப நிலைக்கு ஏர் கூலரை விட ஏசி ஏ சிறந்தது என்றாலும் ஏசி அதிகமான மின்சாரத்தை பயன்படுத்தும் இதன் காரணமாக நமது எலக்ட்ரிக் பில் அதிகமாக வரும். ஏசியை இந்த முறைகளில் பயன்படுத்துவதன் மூலம் நமது  மின்சார கட்டணத்தை குறைக்க இயலும்  அதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

ஏசியை குறைவான வெப்ப நிலையில் பயன்படுத்தும் போது அது அதிக அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. பெரும்பாலானோர் ஏசியை 16 டிகிரி அல்லது 17 டிகிரியில் வைத்து பயன்படுத்துகிறார்கள் . இது அதிக அளவு மின்சாரத்தை  உபயோகிக்கும் . மேலும் மனித உடலுக்கு  தகுந்த வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகும். எனவே ஏசியை எப்போதும் 24 டிகிரியில் வைத்துக் கொள்வதன் மூலம் நமது அறையை  குளிர்ச்சியாக வைப்பதோடு நமது மின்சாரத்தையும் கட்டுப்படுத்த இயலும்.

கோடைகாலத்திற்கு முந்தைய குளிர் காலங்களில் நாம் ஏசியை பயன்படுத்தாமல் வைத்திருந்து. கோடை காலத்தின் போது சர்வீஸ் செய்யாமல் ஏசியை பயன்படுத்துவதால் அதிலிருக்கும் தூசி மற்றும் துகள்கள் ஆகியவை ஏசி குளிர்ச்சி எடை அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்  மேலும் இதற்கு ஏசியும்  அதிகப்படியான நேரம் வேலை செய்ய வேண்டி வரும் இதனால் மின்சார பயன்பாடும் அதிகமாக இருக்கும். எனவே குளிர்காலம் முடிந்து கோடை காலத்தின் தூக்கத்தில்  மறக்காமல் ஏசியை சர்வீஸ் செய்து பயன்படுத்துவதன் மூலம்  மின் கட்டண உயர்வை குறைக்கலாம்.

 

ஏசியை ஆன் செய்யும் முன் அறையில் இருக்கும் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி  அதன்பிறகு ஏசியை ஆன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது வெளியிலிருக்கும் அனல் காற்று வீட்டிற்குள் வராது உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்றும் வெளியே செல்லாது. மாறாக கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டே ஏசியை பயன்படுத்தும் போது ஏசியும் அதிக நேரம்  செயல்பட வேண்டி இருக்கும் இதனால் மின்சார கட்டணமும் அதிகமாக வரும்.

நீங்கள் ஏசியுடன் மேஜை மின்விசிறியையும் சேர்த்து பயன்படுத்தும் போது அவை அறையின் மூளை முடுக்கெல்லாம் குளிர்ந்த காற்றை எடுத்துச் செல்லும். மேலும் மேஜை மின்விசிறி ஓடிக்கொண்டிருக்கும் போது ஏசியின் வெப்பநிலையையும் அதிகமாக குறைக்க வேண்டிய தேவையும் இருக்காது. இதனால் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்தலாம்.

தற்போது வரும் பெரும்பாலான  ஏர் கண்டிஷனர்கள் ஸ்லீப் மோட் வசதியுடன் வருகின்றன. இதன் காரணமாக  ஏசி  அறையிலிருக்கும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை உணர்ந்து அதுவே தானாக ஆப் ஆகிவிடும். இதன் மூலம் நமது மின்சார செலவு எனும் மிச்சப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to save electricity bill even if you use AC during summer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->