வீட்டிலேயே செய்யலாம் சுவையான பேல் பூரி!!
how to prepare bhel poori
வயது வரம்பின்றி அனைவரையும் கவரும் பேல்பூரி செய்வது எப்படி என பார்க்கலாம்.
சட்னி(காரம்):
- பச்சை மிளகாய் - 3,
- கொத்தமல்லி, புதினா - ஒரு கப்,
- உப்பு - தேவையான அளவு.
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், கார சட்னி தயார்.
சட்னி(ஸ்வீட்):
- பேரீச்சம்பழம் - சிறிதளவு,
- புளி - 50 கிராம்,
- வெல்லம் - கால் கப்,
- மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,
- சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
- உப்பு - தேவையான அளவு.
முதலில், வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். பின், ஊற வைத்த புளியைக் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து பின்னர், பேரீச்சம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்து இதனுடன் சேர்க்கவும். பின்னர் கொதிக்க வைத்து மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி எடுத்தால், ஸ்வீட் சட்னி ரெடி.
பேல்பூரி செய்ய தேவையான பொருட்கள் :
- கேரட் - 2,
- அரிசிப் பொரி - 3 கப்,
- வறுத்த வேர்க்கடலை,
- ஓமப் பொடி, - தலா கால் கப்,
- உருளைக்கிழங்கு - 2
- வெங்காயம், தக்காளி - 3,
- சாட் மசாலா - கால் டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,

பேல்பூரி செய்முறை:
- முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
- கேரட்டை நன்றாக துருவிக்கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை எடுத்து வேக வைத்து, பின்னர் தோல் உரித்து சரியான அளவிலான துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
-
- ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் பொரி, கேரட், தக்காளி, வெங்காயம், வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா ஆகியவற்றை சேர்த்துக் நன்றாக கலக்கவும். பின்னர் அதனுடன் ஸ்விட் மற்றும் காரச்சட்னியை கலந்து அதன்மேல் ஓமப் பொடி மற்றும் கொத்தமல்லி தூவிவிட்டு எடுத்து பரிமாறவும்.
- அருமையான பேல் பூரி தயார்!!
English Summary
how to prepare bhel poori