தினம் தினம்.. கொசுக்கடி தூக்கத்தை கெடுக்கிறதா.? இதோ இருக்கு அருமையான வழி.!  - Seithipunal
Seithipunal


பொதுவாக கொசுவை விரட்ட நாம் அனைவரும் மின்சார கொசு விரட்டி அல்லது புகையை ஏற்படுத்தி உடலுக்கு கெடுதல் தரும் கடையில் விற்கும் கொசு விரட்டிகளை பயன்படுத்துகிறோம். 

இதனால், உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நமது நுரையீரலை இந்த சுகாதாரம் இல்லாத புகை பாதிக்கக்கூடும். 

எனவே, இயற்கை வழியில் கொசுவை விரட்டுவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மது அருந்தும் நபர்களை அதிகளவில் விரும்பி கடிக்கும் கொசு?.! ஆராய்ச்சியில்  வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal

துளசி தேவையான அளவு எடுத்துக் கொண்டு அதை சாராக அரைத்து துளசி சாறை ஒரு பாட்டிலில் அடைத்து வீட்டின் உள்பக்கம் மற்றும் புழங்கும் இடங்களில் தெளித்தால் கொசுக்கள் வராது.

 அதுபோல பூண்டை நசுக்கி ஒரு பாத்திரத்தில் கொதிக்க விட வேண்டும். கொதித்து ஆறிய பின் பாட்டிலில் வைத்துக் கொண்டு கொசு வரும் இடங்களில் இந்த பூண்டை ஸ்ப்ரே செய்யலாம்.

உயிரை பறிக்கும் அரக்கன்... இன்று உலக கொசு ஒழிப்பு தினம்...!! - Seithipunal

அத்துடன் கற்பூரத்தை தூள் தூளாக நசுக்கி வீட்டில் இருக்கும் மூளை, முடுக்குகளில் போடலாம். இந்த கற்பூர வாசனைக்கு கொசுக்கள் வராது, 

மேலும் தேங்காய் எண்ணெயை கை, கால்களில் மற்றும் கொசு கடிக்கும் இடங்களில் தடவிக் கொண்டால் கொசு மேலே உட்காராது. இதற்கு வேப்ப எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையும் கூட தடவிக் கொள்ளலாம்  ஆனால் பெரும்பாலும் பலருக்கு இவற்றின் டென்சிட்டி காரணமாக பிசுபிசுப்பு தன்மை ஏற்படுவதால் இந்த எண்ணெய்களை உடலில் தேய்க்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

மது அருந்தும் நபர்களை அதிகளவில் விரும்பி கடிக்கும் கொசு?.! ஆராய்ச்சியில்  வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal

குப்பைமேனி, நொச்சி, ஆடாதொடை, வேப்பிலை உள்ளிட்ட இலைகளை அரைத்து அவற்றை தண்ணீரில் கரைத்து வீட்டில் ஆங்காங்கே சில இடங்களில் தெளித்துவிட்டால், இந்த வாசனையே கொசுக்கள் வீட்டிற்குள் வராது. 

மேலே குறிப்பிட்ட குறிப்புகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் பயன்படுத்தினாலே உங்கள் வீட்டில் இருக்கும் கொசுக்களை எளிமையாக விரட்டி நிம்மதியாக தூங்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To clear mosquitos at Our Home 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->