வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க என்னென்ன சுயதொழில் செய்யலாம்.?! பெர்பெக்ட் ஐடியா இதோ.!  - Seithipunal
Seithipunal


ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்ற வேலையாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும் போது நமது தொழிலுக்கான தேர்ந்தெடுக்க வேண்டிய முதல் பொருள் உற்பத்தி பொருள் தான்.

தொழிலகம் அமைக்க வேண்டிய இடம், தொழில் நடத்தும் முறை, தொழிலகத்தில் பதிவு செய்தல், நிதி உதவி, உரிமம், மின் இணைப்பு, நீர்வசதி, எந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல், திறமையான பணியாளர்களை அமர்த்துதல் என ஒவ்வொன்றையும் கவனமாக அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.
 
உணவு பொருட்கள்:- பெண்கள் தாங்களாகவே ஊறுகாய் தயாரிக்கலாம். இதே போல ரொட்டி, ஜாம், மிட்டாய், சிப்ஸ், கேக், சேமியா, அப்பளம், சாம்பார் பொடி, குச்சி ஐஸ், தேங்காய் பப்ஸ், சீவல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் குறைந்த முதலீட்டில் செய்யலாம்.

வீட்டு உபயோக பொருட்கள்:- பெண்கள் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்யலாம். இதேபோல வெள்ளை பினாயில், பல் பொடி, கிளனிங் பவுடர், ஆயுர் வேதிக் பல் பொடி, வாசனை பத்தி மற்றும் குடை, பாய், பிளாஸ்டிக் பை, வயர் கூடை, கயிறு தயாரிக்கும் தொழில் ஆகியவற்றையும் பெண்கள் செய்யலாம்.

ஸ்டேசனரி பொருட்கள்:- பென்சில், சாக்பீஸ், பால்பென்ரீபிள், மை, நோட்டு லேமினே ஷன், காகிதம், நைலான் பிரஷ், எழுது அட்டை, பைல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் தயாரிக்கலாம்.

துணி வகைகள்:- பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கலாம். டைலரிங் தொழில் செய்யலாம்.

துணியில் ஸ்கிரீன் பிரிண்டிங், எம்ப்ராய்டரி, பித்தான், ஊக்கு, தலைமுடி கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவை தயாரிக்கலாம். இந்த தொழில்களை செய்ய ஆலோசனை பெறவும், இதுபோன்ற தேவைகளுக்காக மத்திய- மாநில அரசுகள் தொழில் அமைச்சகம் மூலம் பயிற்சியும் வழங்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

home business ideas


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal